இந்தியாவில், திருமண உறுதிமொழியை மோசடியாக மீறும் ஆண்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், இந்தியாவின் 164 வருட காலனித்துவ கால தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டத்தின் பிரிவு 69 இன் படி, ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட பிறகு, திருமண உறுதிமொழியை மோசடியாக மீறும் ஆண்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இது தொடர்பாக, பெண்கள் உரிமைக் குழுக்கள் அரசுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன, மேலும் இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகம் பெரும்பாலும் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பதால், பெண்களைப் பாதுகாக்க இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சாதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக 1950 இல் ஒழிக்கப்பட்டது, ஆனால் 2,000 ஆண்டுகள் பழமையான சமூகப் படிநிலை இன்னும் பல அம்சங்களில் உள்ளது. அவற்றுள் திருமணம் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.