நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் : சஜித் சேனல்களுக்கு பயந்தவரல்ல – ஹிருணிகா..

ஹரின் பெர்னாண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள SJB தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தமக்கு வழங்கப்படுமாயின் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். .
ஆனால், அதைத் தருமாறு கட்சியிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.
கடுவெல தொகுதி அமைப்பாளர் பதவியை மட்டும் தான் இதுவரை கட்சியிடம் கோரியதாக அவர் குறிப்பிடுகிறார்.
தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என ஊடக நிறுவனம் ஒன்று அழுத்தம் கொடுத்ததாக வெளியானது குறித்து ,ஊடகச் செய்திகளுக்கு பதிலளித்த அவர், SJBயை அல்லது சஜித் பிரேமதாசவை ஒரு ஊடக நிறுவனம் விரும்பும் விதத்தில் ஆட்ட முடியும் என தான் நம்பவில்லை என்று கூறினார்.