ஜனாதிபதி ரணிலின் கூட்டணியில் இணையவுள்ள SJB குழு.. ஏற்கனவே ஆறு பேர் வெளியே ……
எதிர்வரும் 16ஆம் திகதி SJB உள்ளிட்ட கட்சிகளின் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே SJBயடன் இணைந்து செயற்படாத சுமார் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.