ஜனாதிபதித் தேர்தலில் நாமல் 50.29% வாக்குகளைப் பெறுவார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளின் சதவீதத்தை நாமல் ராஜபக்ச பெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் கீழ் இந்த நாடு மற்றுமொரு பாய்ச்சலை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.