கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதற்கு தேவையான அதிஉச்ச ஒத்துழைப்பை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகளை மக்கள் உரியவகையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கியதாலேயே கடந்த காலங்களில் கொரோனா சமூகத்தொற்றை எம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். அதேபோல் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட 56 நடைமுறைகள் நிச்சயம் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படவேண்டும். அவ்வாறு பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.
நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுங்கள். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளவும் என்றார்.