மன்னாரில் பாணின் விலை அதிகம் : மக்கள் விசனம்
மற்றைய மாவட்டங்களில் சாதாரண பாண் றாத்தல் ஓன்று 140 ரூபாவாக, விற்பனை செய்யப்படுகையில், மன்னாரில் மட்டும் சாதாரண பாண் ஒரு றாத்தலின் விலை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,
இது தொடர்பாக மன்னார் அரசாங்க அதிபரிடம் மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைவாக, இன்றைய தினம்(12/08),திங்கட்கிழமை மன்னார் மாவட்ட வெதுப்பக உரிமையாளர்களுடன், அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
மேற்படி கலந்துரையாடலின் போது, பாண் றாத்தல் ஒன்றின் விலையை 140 ரூபாயாகக் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் செயற்பாட்டில் இல்லாத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளையதினத்திலிருந்து (13/08) மக்கள் அனைத்து வெதுப்பகங்களிலும் சாதாரண பாண் றாத்தல் ஒன்றினை 140 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு விற்கப்பாடாவிடின் 023222235 என்னும் மாவட்டச்செயலகத்தின் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது நேரிலோ, சென்று முறைப்பாடு செய்யமுடியுமெனவும். மக்களுக்கு அரசாங்க அதிபரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரோகினி நிஷாந்தன்