ஹோட்டலின் மேற்கூரையில் மோதிய ஹெலிகாப்டர்; விமானி மரணம் (Video)

ஆஸ்திரேலியாவில் Hilton ஹோட்டலின் மேற்கூரையில் ஒரு ஹெலிகாப்டர் மோதியதில் விமானி மாண்டார்.

விமானி சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டது உறுதிசெய்யப்பட்டது.

ஹெலிகாப்டரில் வேறு எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இன்று (12 ஆகஸ்ட்) கெய்ன்ஸ் (Cairns) நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் நடந்தது.

ஹெலிகாப்டரின் நொறுங்கிய பகுதிகள் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த இருவர் காயமுற்றனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஹோட்டலில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கானோர் ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பிலான காணொளிகளைச் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.