Eiffel கோபுரத்தில் ஒருவர் ஏறியதைத் தொடர்ந்து சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் Eiffel கோபுரத்தில் ஆடவர் ஒருவர் ஏறியதைத் தொடர்ந்து அந்த வட்டாரத்திலிருந்த மக்களைக் காவல்துறை வெளியேற்றியது.
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு முன்னர் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
பிற்பகல் நேரத்தில் சட்டை அணியாத அந்த ஆடவர் 330 மீட்டர் உயரங்கொண்ட கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
ஒலிம்பிக் வளையங்களுக்கு மேல் அவர் காணப்பட்டார். கோபுரத்தின் முதல் காட்சியிடத்துக்கு மேல் அவை உள்ளன.
கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் காவல்துறை மக்களை வெளியேற்றியது.
ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் Eiffel கோபுரத்துக்குப் பங்கு இல்லை. தொடக்க விழாவில் கோபுரம் முக்கியப் பங்கை வகித்தது. பின்னர் அவர் போலீசாரால் கைதானார்.