சிறுமி ஒருவரை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் : சிலர் கைது.

எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், டயகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், அவரை வீடொன்றில் தடுத்து வைக்க உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதோடு, வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுமி பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுமியை ஹொரண ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார், சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தமித் ஜயதிலக மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஹொரணையில் உள்ள மேற்படி நடத்துனரின் வீட்டில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். றெமுன பிரதேசத்தில், சிறுமியை ஏமாற்றி தடுத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் நடத்துனர் பற்றிய தகவல் தெரியவந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்பின், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை கடத்திச் செல்வதற்கு முன், நடத்துனர் மூன்று ஆண்டுகளாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

பிரதேசத்திலும் வீட்டிற்கு அருகாமையிலும் உள்ள விடுதிகளில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுமி தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் தலைமையில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியக கட்டளை அதிகாரி மஹேஷிகா தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.