தொழில் உற்பத்தியை அதிகரிக்க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது : தோட்ட முதலாளிகள் தெரிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க பெருந்தோட்ட கம்பனிகள் முனைவதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளத்தை 1350 ரூபாவாக அதிகரிப்பதற்கு வேதனக் கட்டுப்பாட்டுச் சபை, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்கள் நேற்று (12) இணக்கம் தெரிவித்ததுடன், அந்தச் சம்பளத்திற்கு மேலதிகமாக EPF மற்றும் ETF வழங்கப்படும். ஒரு நாள் சம்பளத்திற்காக பறிக்கப்படும் 18-20 கிலோ கச்சா தேயிலைக்கு, பறிக்கும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் 50 ரூபாயும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டமடைந்து வரும் வேளையில், இந்நாட்டில் தேயிலை கைத்தொழிலைத் தொடர தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 25% அதிகரிக்கச் சம்மதித்ததாக ரொஷான் ராஜதுரை கூறுகிறார்.
தோட்டத் தொழிலாளர்கள் திறமையாக உழைத்தால், கூடுதல் தேயிலை கொழுந்து பறிப்பதன் மூலம் நாளொன்றுக்கு அதிகளவு வருமானம் ஈட்ட முடியும் எனவும், புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக இருதரப்பும் செய்துகொண்ட உடன்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள ரொஷான் ராஜதுரை , புதிய சம்பள உயர்வு தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.