எதிர்கால கடன்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதானிகளுடன் அனுர சந்திப்பு..

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி தகாபுமி கடோனோவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 12 மணியளவில் பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை மீளாய்வு செய்த பிரதிநிதிகள், இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு அந்த அமைப்பு தயாராகவுள்ளமை தொடர்பிலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.