புத்தளம் மாவட்ட விமலின் பாராளுமன்ற உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு.

புத்தளம் மாவட்டத்தில் இருந்து விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
அவர் இன்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினரானார்.