எதிர்வரும் செப்.22ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க அனைத்தும் தயார் – விஜித ஹேரத்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சகலமும் தயார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டவுடன் அதனை தனது முதல் பணியாக செய்வேன் என்றார்.
ஊழல்வாதிகள், திருடர்கள், குண்டர்கள் நிறைந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்தை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.