சுயேச்சை ரணிலின் ஒரு புதிய மொட்டு கட்சி.. செயலாளர் ரமேஷ்..
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளனர்.
அதன் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.