அன்று நாட்டைக் காப்பாற்றியதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிகிறது – ரணில்

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஆதரவளிப்பது ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று (13) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப் படைக் கட்டளையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.