ஆதரவளிக்க அமைச்சர் பதவியும், 20 கோடியும் ஜனாதிபதியிடம் கேட்ட MP .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சை தனக்கு வழங்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்சிக்கு 200 மில்லியன் ரூபாவை வழங்குமாறும் கேட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

எனினும் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி உடன்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலைமையின் அடிப்படையில் குறித்த உறுப்பினர் SJBயுடன் கலந்துரையாடி வெற்றியடைந்துள்ளதாகவும், அவர் அக்கட்சியுடன் மிக விரைவில் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.