வெளியானது பெருந்தோட்ட தொழிலாளர் சம்பளம் 1700 ரூபாய் வர்த்தமானி !

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் குழுவின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,350 என்றும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு உட்பட்டு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உற்பத்தித்திறன் அடிப்படையில் 350 ரூபா ஊக்கத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான ஆட்சேபனைகளை எதிர்வரும் 28ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர், ஆட்சேபனைகளுக்கான காரண அறிக்கையுடன் தமக்கு அனுப்பி வைக்குமாறு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் உரிய வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.