திசைகாட்டி அமைச்சர்களுக்கு ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ.
எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்படும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்க தனியான ஆலோசனை குழு நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆலோசகர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் வல்லுனர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.