பதவியைக் கைவிடும் முடிவில் ஜப்பானியப் பிரதமர் கிஷிடா

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) கட்சிக்கான தலைமைத்துவப் போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

கிஷிடாவின் மிதவாத ஜனநாயகக் கட்சி புதிய தலைவருக்கான தேர்தலை அடுத்த மாதம் (செப்டம்பர் 2024) நடத்தவிருக்கிறது.

தமது முடிவு மக்களுக்குச் சிறந்ததாக இருக்கும் என நினைத்துப் போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று 67 வயது கிஷிடா கூறியுள்ளார்.

கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் திரு கிஷிடா, நாட்டின் பிரதமர் பதவியையும் கைவிடுவார்.

கிஷிடா பிரதமர் பொறுப்பேற்று சுமார் 3 ஆண்டுகளாகிறது.

நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி, அடுத்தடுத்து எழுந்த ஊழல் புகார்கள், அரசியல் சர்ச்சைகள் ஆகியவை அதற்குக் காரணங்கள்.

கருத்துக்கணிப்புகளும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

Leave A Reply

Your email address will not be published.