விண்வெளியில் சிக்கிக்கொண்ட 2 வீரர்களை பூமிக்குக் கொண்டுவர புதிய முயற்சி
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, விண்வெளியில் சிக்கிக்கொண்ட இரண்டு வீரர்களை எப்படி பூமிக்குக் கொண்டுவருவது என்பதை ஆராய்ந்துவருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), பேரி வில்மோர் (Barry Wilmore) ஆகிய இருவரும் விண்வெளியில் உள்ள அனைத்துலக ஆய்வு நிலையத்திற்கு ஜூன் மாதம் 5ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்டனர்.
சுமார் ஒரு வாரத்துக்கு மட்டும் அவர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாற்றால் சுனிதாவையும் பேரி வில்மோரையும் பூமிக்குத் திரும்பக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதமாக இருவரும் விண்வெளியில் சிக்கியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும்வரை அவர்கள் அங்கேயே இருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.
2025ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் SpaceX நிறுவனத்தின் Crew Dragon விண்கலத்தின் உதவியுடன் வீரர்களைப் பூமிக்குக் கொண்டுவர NASA முயல்கிறது.