மூன்றாவது காதலரா? மூன்றாவது கணவரா? நயன்தாரா Vs வனிதா
ஒரு நடிகர் பல நடிகைகளை திருமணம் செய்து கொள்வதும், ஒரு நடிகை பல நடிகர்களை அல்லது பல தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடப்பது தான்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா தான் தற்போது மூன்றாவதாக விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார்.
காதலில் நயன்தாரா என்றால் கல்யாணத்தில் வனிதா விஜயகுமார் தான். இரண்டு கணவர், ஒருவருடன் லிவிங் டுகெதர் என அனைத்தையும் தாண்டி தற்போது பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது முறையாக குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பாலுடன் கோவா சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை காப்பி அடிக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாராவும் சமீபத்தில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவா சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்ந்தா, நடிகைகள் போல் தான் வாழ வேண்டும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.