அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அறிக்கை!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனைகளில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், முடிந்த போதெல்லாம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் பாடுபடும்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். சேனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைய, இந்த பிரேரணை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாழ்க்கை நிலைமைகள், பொருளாதார நிலைமைகள், பணம் செலுத்தும் திறன் போன்ற அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்மொழியப்பட்ட தீர்வுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.