மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டபோதும் மது அருந்தும் பழக்கத்தை மஞ்சுளா அம்மா நிறுத்தவில்லை: கண்கலங்கிப் பேசிய வனிதா.

நடிகர் விஜயகுமாரின் மனைவியும் நடிகையுமான மஞ்சுளா மதுப் பழக்கத்துக்கு அடிமையானது குறித்து அவரது மகள் வனிதா கண்கலங்கி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
கோலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் நடிகை வனிதா, நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் மகளாகப் பிறந்தவர்.
தன் தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார் வனிதா.
அண்மையில் ஷகீலாவுடன் யூடியூப் நேர்காணல் ஒன்றில் வனிதா விஜயகுமார் பேசியபோது, “என் அம்மா மஞ்சுளா மூன்று முறை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இருந்தபோதும், அவர் தனது மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தார்.
இதனால்தான் அவரது உடல்நலன் மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒருமுறை போதையுடன் மஞ்சுளா அம்மா பேட்டி அளித்ததை இந்த ஊர், உலகமே பார்த்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
72 மணிநேரத்தில் இறந்துவிடுவோம் எனத் தெரிந்ததும், தன்னிடம் சில ரகசியங்களை மஞ்சுளா பகிர்ந்துகொண்டதாகவும் வனிதா கூறினார்.
இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து, அனைத்து சொத்து பத்திரங்களிலும் என் பெயரைச் சேர்க்குமாறு கூறினார். எனது தந்தையிடமும் வனிதாவை கைவிட்டு விடாதீர்கள் என்று சொன்னார்.
மஞ்சுளா அம்மா இறந்தபின்னர் என்னை அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவிடாமல் தடுத்தார்கள். அப்போது சரத்குமார், ராதாரவி ஆகியோர்தான் என்னை அழைத்து அம்மாவுக்கு இறுதிச்சடங்கை செய்யவைத்தனர்.
அன்றைக்கு மட்டும் அவர்கள் இல்லையெனில் எனது தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்யமுடியாமல் போயிருக்கும் என வனிதா அந்த நேர்காணலில் கண்கலங்கியபடி பேசியிருக்கிறார்.