உணவு உண்ட பிறகு இனிப்பு சாப்பிட வழிகள்.

உணவு உண்ட பிறகு இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்குத் தோன்றும்.

சாக்லெட், இனிப்பு தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிட ஆசை ஏற்படும்போது ஆரோக்கியமாக சாப்பிட ஒருவர் பழகிக்கொண்டால்தான் ஒருவரால் நோயின்றி வாழமுடியும்.

இனிப்பு உணவு வகைகளில் ஆரோக்கியமான தெரிவுகள் பல உள்ளன. அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தெரியாதவர்கள் சுயமாக வீட்டில் தயாரித்து சாப்பிட எளிதான சமையல் குறிப்புகள் உள்ளன.

பழங்கள்
பழங்களில் இயற்கையாகவே இனிப்பு நிறைந்துள்ளது.

உணவு உண்ட பிறகு இனிப்பான உணவைச் சாப்பிட ஆசைப்பட்டால், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, தர்பூசணி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். அவை பற்களுக்கும் நல்லது.

‘கிரீக் யோகர்ட்’ தயிர்
யோகர்ட் எனப்படும் தயிரை சாதாரணமாக சாப்பிடுவதற்குப் பதிலாக அதில் இனிப்பான பழங்களை சேர்த்துக்கொண்டால் ஒருவருக்கு அதிலிருந்து பல சத்துக்கள் கிடைக்கும்.

பழங்கள், பருப்பு வகைகள், தேன் போன்றவற்றை ‘கிரீக் யோகர்ட்’ தயிரில் சேர்த்து உண்டால் அது கிட்டத்தட்ட பனிக்கூழ் சாப்பிடுவதுபோல் இருக்கும்.

கடலை வெண்ணெய் வாழைப்பழப் பனிக்கூழ்
பனிக்கூழ் பலருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் சர்க்கரை சேர்க்காமல் சுயமாக செய்து சாப்பிட எளிய முறை உள்ளது.

இரண்டு உறைந்த வாழைப்பழங்களுடன் கால் பங்கு கடலை வெண்ணெய்யைச் சேர்த்து சாப்பிட்டால் அது பனிக்கூழ் சாப்பிடும் உணர்வை அளிக்கும்.

சியா விதை களி
சியா விதை களி செய்வது மிகவும் எளிது.

பாலில் சிறிதளவு சியா விதைகளைச் சேர்த்து சில மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, சுவைக்கு தேனை சேர்த்துக்கொண்டால் அது மிகவும் ஆரோக்கியம் தரும்.

பருப்பு வெண்ணெய்
இனிப்பாக ஏதாவது சாப்பிடத் தோன்றும்போது பாதாம் பருப்பு வெண்ணெய் அல்லது கடலை வெண்ணெய்யை சாப்பிட்டால் அது ஒருவரின் பசியை நன்கு குறைக்கும். அதில் புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.

வாட்டிய பேரிக்காய்
பேரிக்காய்ப் பழங்கள் சிலவற்றை எடுத்து அதை அடுப்பில் சிறிது நேரம் வாட்டிய பிறகு அதன்மேல் தேனைத் தடவி சாப்பிட்டால் ஆரோக்கியமான இனிப்பு தின்பண்டம் தயாராகிவிடும்.

வாட்டிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இயற்கையாகவே இனிப்பு அதிகம் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதை அடுப்பில் வாட்டிய பிறகு சிறிதளவு வெண்ணெய் தடவி சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.

Leave A Reply

Your email address will not be published.