தொழிற்திறன் விருத்தி இலவச பயிற்சிப்பட்டறை.
தொழிற்திறன் விருத்தி இலவச பயிற்சிப்பட்டறை இன்று (05)முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டதில் வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வடமாகாண தொழில் முறைசார் தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனம், இலங்கை பொறியாளர் சங்கம் – கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றின் ஒழுங்குபடுத்தலுடன் முல்லைத்தீவு மாவட்ட மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வெற்றிக்கான மென்திறன்கள் சுயமுன்னேற்ற பயிற்சிப்பட்டறை (தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி) இன்று (05) திங்கட்கிழமை காலை 09.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண தொழில் முறைசார் தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இலங்கை பொறியாளர் சங்கம் – கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றின் தலைவர் பொறியாளர் என்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள், வடமாகாண தொழில் முறைசார் தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இலங்கை பொறியாளர் சங்கம் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர்கள், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காலை 09.00மணி தொடக்கம் மதியம் 12.00மணிவரை இடம்பெற்ற இப் பயிற்சிப் பட்டறையில் துரைராஜா பிரஷாந்தன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார். அவருக்கான நினைவுச் சின்னம் மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் தொழிற்சந்தையில் கால்பதிப்பதற்கு கல்வியறிவுக்கும் அப்பால் பல்வேறு மென் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ள இக் காலகட்டத்தில் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுய ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்கான கோப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொவிட் -19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இத் தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது