பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்கள் பட்டியல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று மிக பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பாராத சில பிரபலங்கள் கூட போட்டியாளர்களாக உள்ளே வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக அடியெடுத்து வைத்துள்ள 16 போட்டியாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க…

முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்தவர் தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ராஜ்.

இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர், பிரபல மொடலும், நடிகையுமான சனம் ஷெட்டி. இவர் கடந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளரான, தர்ஷனின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகனுக்கே ஜோடி போட்ட நடிகை ரேகா தான் மூன்றாவது போட்டியாளராக உள்ளே சென்றவர்.

மொடலிங் துறையை சேர்ந்த பாலா நான்காவது போட்டியாளராக உள்ளே சென்றார்.

ஐந்தாவது போட்டியாளராக பிரபல செய்து வாசிப்பாளர் அனிதா சம்பத் உள்ளே நுழைந்தார்.

அரைகுறை ஆடையில் சமூக வலைத்தளத்தை சூடேற்றி வந்த ஷிவானி 6 ஆவது போட்டியாளராக உள்ளே சென்றார்.

7 ஆவது போட்டியாளராக உள்ளே சென்றவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜித்தன் ரமேஷ்

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் 8 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

நடிகர் ஆரி 9 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

பாக்ஸர் மற்றும் மொடலுமான சோம் சேகர் 10 வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்தார்.

விஜய் டிவி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள கேப்ரில்லா 11 ஆவது போட்டியாளராக சென்றார்.

விஜய் டிவி ஸ்டாண்ட் அப் காமெடி வுமன் நிஷா 12 ஆவது போட்டியாளராக உள்ளே சென்றார்.

13 வது போட்டியாளராக யாரும் சற்றும் எதிர்பாராத ரம்யா பாண்டியன் உள்ளே வந்தார்.

14 ஆவது போட்டியாளராக, மொடலிங் துறையை சேர்ந்தவரும், நடிகையுமான சம்யுக்தா உள்ளே வந்தார்.

15 ஆவது போட்டியாளராக இசை கலைஞர் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளே வந்தார்.

இறுதி போட்டியாளராக விஜய் டிவி தொலைக்காட்சியால் பின்னணி பாடகராக உருவெடுத்த, ஆஜித் உள்ளே நுழைந்தார்.