மொட்டை விட்டுச் சென்றோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை.
ஒழுக்காற்று சபையை அழைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஒழுக்காற்று சபையைக் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சியை விட்டு விலகி பல்வேறு வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.