நாட்டை மீட்க கற்றுக்கொடுங்கள் என ஜனாதிபதி ரணிலிடம் ஆலோசனை கேட்ட வங்க தலைவர் யூனுஸ்.

போராட்டத்தின் பின்னர் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பங்களாதேஷை மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவை வழங்குமாறு நாட்டின் புதிய தலைவர் மொஹமட் யூனுஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷின் புதிய பிரதமர் மொஹமட் யூனுஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பங்களாதேஷிற்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாகவும் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பங்களாதேஷில் முதலீடு செய்து நாட்டில் தங்கியுள்ள இலங்கை வர்த்தகர்களை அங்கு தங்கி தமது வர்த்தகத்தை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளதாக பங்களாதேஷ் பிரதமரிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.