மஹிந்தவை திட்டித் தீர்த்த சிரேஷ்ட அமைச்சர் .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலுக்கு ஆதரவளிக்குமாறு , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை விடுத்தவரை திட்டி தீர்த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பில் கட்சியின் மற்றுமொரு பலமான நபரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் , அவரது குடும்பத்திற்குத் தவிர வேறு யாருக்கும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை என சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இவ்வாறான பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள அந்த சிரேஷ்ட அமைச்சர், ராஜபக்சவின் வழிகாட்டலுக்கு இனி ஒருபோதும் காத்திருக்கப் போவதில்லை எனவும் அந்த சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்சியமைத்தது தனது வாழ்வில் செய்த பாரிய தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவின் தகவல்களை மீண்டும் , தம்மிடம் தெரிவிக்க வேண்டாம் எனவும், தனிப்பட்ட நட்பை அவ்வாறே பேண முடியும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் கடுமையாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.