சஜித்தின் தேர்தல் செலவு நடவடிக்கை ஜலனி வசம்

SJB தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி திருமதி ஜலனி பிரேமதாச ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் தலையிடுவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பணத்தைச் செலவு செய்வதை அவரும் இரண்டு அல்லது மூன்று கட்சி உறுப்பினர்களும் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
பணம் கொடுப்பது மிகவும் குறைவாக உள்ளதன் காரணமாக சில அமைப்பாளர்கள் இது குறித்து அதிருப்தியில் உள்ளனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணத்தைச் சேமிக்க சில தொகுதி அமைப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சியினால், இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் கடும் கட்டுப்பாடுகளுடன் பகிரப்படுவதாகக் கூறப்படுகிறது.