“2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாகும்” – பிரதமர் மோடி நம்பிக்கை.

இந்தியா அதன் பொற்காலத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா, வளர்ந்த நாடாகும் இலக்கு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தலைநகர் புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில் நாட்டின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் திரு மோடி உரையாற்றினார்.
தற்போதுள்ள நல்வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
கனவுகளை நனவாக்க மனஉறுதியுடன் செயல்பட்டுப் பொன்னான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார் இந்தியப் பிரதமர்.
அண்மை இயற்கைப் பேரிடர்கள் கவலை அளிப்பதாகவும் அவர் சொன்னார். அதில் பலரும் மாண்டது நாட்டுக்குப் பேரிழப்பு என்று திரு மோடி குறிப்பிட்டார்.