டிரம்ப் திடீரென மருத்துவமனையை விட்டு வெளியேறினார்
டிரம்ப் திடீரென மருத்துவமனையை விட்டு வெளியேறி, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பணயம் வைத்துள்ளார்
அமெரிக்கர்கள் கேட்கிறார்கள், “தொற்றுநோய் இன்னும் அவருக்கு ஒரு விளையாட்டுதானா?”
நேற்று, அவரும் அவரது மெய்க்காப்பாளர்களும் ஒரு எஸ்யூவியில் ஏறி வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அரசியல் ஆதரவாளர்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் வெளியேறினர்.
டிரம்பின் ஆலோசகர்களது ஆலோசனையின் பேரில் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என சி.என்.என் தெரிவித்துள்ளது.
எஸ்யூவியின் பின் இருக்கையில் ஃபேஸ் மாஸ்க் அணிந்திருந்த டிரம்பும் ஆதரவாளர்களுக்கு கையசைத்து கொண்டு செல்வதை காண முடிகிறது.
இந்த சம்பவத்திலிருந்து எழும் சில சிக்கல்கள் இங்கே.
டிரம்பின் நோய் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் விரும்புவது எல்லாம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதுதான்.
வெள்ளை மாளிகை ஊழியர்களை மீண்டும் ஒரு தொற்றுநோய்க்கு ஆளாக்க அவர் தயாராக உள்ளார்.
அவரை ஒரு எஸ்யூவியில் அழைத்துச் சென்ற புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
இப்போது அவர்கள் அனைவரும், எஸ்யூவியின் டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள் செல்ல வேண்டும்.
“ஒரு அரசியல் நாடகத்திற்காக ஜனாதிபதி இந்த மக்கள் அனைவரின் உயிரையும் பணயம் வைத்தார். அவர்கள் நோய்வாய்ப்படலாம். அவர்கள் இறக்கவும் கூடும் ”என்று டாக்டர் ஜேம்ஸ் பிலிப் ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் SUV வாகனம் தோட்டாக்களிலிருந்து பாதுகாப்பானது. இது இரசாயன தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பானது. ஆனால் இது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பானது அல்ல.
வெள்ளை மாளிகை ஊழியர்கள் திகைத்துப் போனார்கள்
அமெரிக்க ஜனாதிபதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. ஆனால் வெள்ளை மாளிகை மேலாண்மை அலுவலகம் தனது ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக அதை அறிவித்தது. அதன் பின்னர், அவர்கள் டிரம்பின் உடல்நலம் குறித்த எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதற்கிடையில், பல வெள்ளை மாளிகை ஊழியர்கள் கோவிட் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இப்போது இவை அனைத்திற்கும் பின்னால், டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வருகிறார் என்பதை அவர்கள் அறிவார்கள். அதாவது, முதல் பெண்மணி மெலனியா டிரம்பும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.
பிரச்சார பேரணிகள் தொடர்கின்றன
ட்ரம்பின் 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் மூத்த தலைவரான ஜேசன் மில்லர், சி.என்.என் மற்றும் நியூஸ்ரூமிடம், தேர்தல் பிரச்சாரம் “தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திட்டமிட்டபடி நடக்கும்” என்று கூறியுள்ளார்.
அதன்படி, பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்களுக்கு கை சுத்திகரிப்பு செனிடைசர் மற்றும் முகமூடிகள் வழங்கப்படும். ஆனால் அவர்கள் முகமூடி அணிவது கட்டாயமானது என்று கூட அவர் சொல்லவில்லை.
மாறாக, இந்த டிரம்ப்பை போலவே அவரது ஆலோசகர் ,
“நாங்கள் பயப்படவில்லை …” என்றார்.
ஒரு மக்கள் தலைவர் இதைவிட பொறுப்பற்ற முறையில் செயல்பட முடியுமா?