மின்-வாகனங்களை மின்னூட்டும் உலகின் அதிவேக மின்கலன்.

சீனாவின் Zeekr கார் நிறுவனம் அதன் மின்-வாகன மின்கலன்களால் வேகமாக மின்னூட்ட முடியும் என்று கூறியுள்ளது.

Tesla, BYD போன்ற நிறுவனங்களைவிட அந்த மின்கலன் அதிவேகத்தில் வேலை செய்யும் என்றது Zeekr.

அவற்றால் பத்தரை நிமிடத்தில் மின்கலனின் ஆற்றலை 10 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காட்டுக்கு அதிகரிக்க முடியும் என்று நிறுவனம் சொன்னது.

மாறாக Tesla அதன் Model 3 வாகனத்தை 15 நிமிடத்துக்கு மின்னூட்டினால் 282 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று நிறுவன உரிமையாளர் இலோன் மஸ்க் (Elon Musk) கூறினார்.

புதிய மின்கலனைக் கொண்ட Zeekr நிறுவனத்தின் 2025 007 sedan கார் அடுத்த வாரம் சந்தையில் அறிமுகம் காணவிருக்கிறது.

குளிர்காலங்களிலும் மின்கலன் நன்கு வேலை செய்யும் என்று நிறுவனம் சொன்னது.

Leave A Reply

Your email address will not be published.