பிரிட்டனில் ஆளில்லா வானூர்தி சோதனை.

பிரிட்டன் அவசரச் சேவைகளுக்கும் விநியோகத்திற்கும் ஆளில்லா வானூர்திகளைச் சோதனை செய்து பார்க்கவுள்ளது.
அது போன்ற பயன்பாடுகளுக்காக இன்னும் அதிகமான ஆளில்லா வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்போவதாய் இங்கிலாந்தின் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு (2024) தொடக்கத்தில் அறிவித்தது.
தற்போது பிரிட்டனில் கடுமையான நிபந்தனைகளுடன் நடத்தப்படும் சோதனைகளில் மட்டும் பார்வைக்கு எட்டாத தூரத்திற்கு ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட அனுமதி உண்டு.
ஆணையம் 6 திட்டங்களைத் தெரிவுசெய்துள்ளது.
அந்த நிறுவனங்கள் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடலாம்.
Prime Air எனும் Amazon நிறுவனத்தின் ஆளில்லா வானூர்தி விநியோகச் சேவை..
கடலோர நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் Airspection திட்டம்..
மருத்துவப் பொருள்களை விநியோகம் செய்யும் Project Lifeline எனும் திட்டம்..
ஆகியவை ஆணையம் தெரிவுசெய்துள்ள திட்டங்களில் அடங்கும்.