பயங்கரவாத அச்சுறுத்தலுக்குப் பிறகு இடம்பெறும் டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி.

அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் (Taylor Swift) அவரின் “Eras” இசை நிகழ்ச்சியை இன்று (15 ஆகஸ்ட்) லண்டனில் படைக்கவிருக்கிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெறவிருந்த வியன்னா (Vienna) இசைநிகழ்ச்சிகள் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டன.
கிட்டத்தட்ட 90,000 ரசிகர்கள் லண்டனின் வெம்ப்ளி (Wembley) அரங்கத்தில் கூடுவர் என்று நம்பப்படுகிறது.
5 நாளுக்கு நடைபெறவிருக்கும் அந்த இசை நிகழ்ச்சியின் முதல் நாள் இன்று.
நுழைவுச்சீட்டுகளைச் சோதனை செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டது.
கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள இளைஞர் ஒருவர் சுவிஃப்ட்டின் 3 இசைநிகழ்ச்சிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.