“மாபெரும் நிலநடுக்கம்” எச்சரிக்கை நிலையை அகற்றிய ஜப்பான்.
ஜப்பானில் ஒரு வாரமாக விடுக்கப்பட்ட “மாபெரும் நிலநடுக்கம்” எனும் எச்சரிக்கை நிலை இன்று (15 ஆகஸ்ட்) அகற்றப்பட்டதாகப் பேரிடர் நிர்வாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆயினும் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அகன்றதாக அது பொருள்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் எதிர்பார்க்கப்படும் பெரிய நிலநடுக்கத்திற்கு எப்போதும் தயாராக இருக்கும்படி அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் விடுமுறைத் திட்டங்களை ரத்துச் செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை (8 ஆகஸ்ட்) ஜப்பானின் கியூஷு (Kyushu), ஷிக்கோகு (Shikoku) வட்டாரங்களை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
14 பேருக்குக் காயம் ஏற்பட்டது.