இந்திய ஆடவரின் உடலில் பெண் இனப்பெருக்க உறுப்புகள்.
இந்தியாவில் hernia எனப்படும் குடலிறக்க நோய்க்காகச் சிகிச்சை பெற்ற ராஜ்கீர் மிஸ்திரி (Rajgir Mistri) என்பவருக்குப் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
46 வயது ராஜ்கீர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகரைச் சேர்ந்தவர்.
அவருக்கு இரு பிள்ளைகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சிகிச்சை பெறுவதற்கு முன்னர் ராஜ்கீர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
சிகிச்சை மேற்கொண்டபோது ராஜ்கீருக்கு
முழமையாக வளர்ச்சியடையாத கருப்பையும் முட்டை உருவாகும் உறுப்பும் இருந்ததாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ராஜ்கீருக்குப் பிறப்பிலேயே பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
சிகிச்சை பெற்ற அவர் நலமாக இருப்பதாகவும் குணமாகி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.