நாடு சாதாரண நிலையில் இல்லை. மக்கள் சோகத்தில் உள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர்.

சகலமும் இயல்பு நிலையில் என ஜனாதிபதி கூறினாலும் நாட்டில் புதிய இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் தொழில் இழப்பு, வாழ்வாதாரம், வறுமை போன்றவற்றால் அவதியுறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுகர்வதற்கும், முதலீடு செய்வதற்கும், சேமிப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் மக்களுக்கு உரிமை இல்லை என்றும், நாட்டின் ஏற்றுமதி கூட வீழ்ச்சியடைந்துள்ளதால், நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன்று (16) கண்டியில் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் பொருளாதாரத்தை குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து, மக்கள் பணப்பையை பிக் பாக்கெட் அடித்து, செலவழிக்க முடியாத நிலையில் , நாட்டை அழித்து நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் மீது வரம்பற்ற சுமையை சுமத்திய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் தளர்த்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை துன்பங்களிலிருந்து விடுவிப்பதற்காக நாட்டைக் கட்டியெழுப்பும் அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் வளர்ந்த கலாச்சாரம் மற்றும் நாகரீகமான சட்டம் ஒழுங்கு கொண்ட நாட்டை உருவாக்குவேன் என்றும் பிரேமதாச கூறினார்.

அனைத்து மதத் தலைவர்களும் கூறும் அறிவுரைகளைப் புரிந்துகொண்டு, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கியதை உணர்ந்து நாகரீகமான நாட்டை உருவாக்குவேன் என்றார். 220 இலட்சம் மக்களுக்காக மக்கள் எழுந்து நின்று சேவையாற்றியமை பற்றி மகாநாயக்க தேரருக்கு அறிவுறித்தினார்.

Leave A Reply

Your email address will not be published.