உலகில் மிக நீளமான சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
உலகில் மிக நீளமான சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி ஜீ.
இமாச்சல பிரதேசத்தின் மணாலியில் இருந்து, லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப் பாதை 1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்த பாதையை அமைப்பதற்கான திட்டத்தை வகுத்ததால் அவர் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது…
உலகில் பொறியல் துறைக்கு மிகவும் சவாலானது என்று கருதப்படும் இந்த சுரங்கப்பாதை 10 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது…
மணாலியில் இருந்து லடாக்கின் லே-வுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 9.02 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10ஆயிரத்து 44அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சாலை, 13 மீட்டர் அகலம் கொண்டுள்ளது.
இச்சாலையில் 60 மீட்டர் தூரத்திற்கு கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கு இடையே அவசர கால வெளியேறும் வசதி, தொலைப்பேசி வசதி, காற்றோட்ட வசதி என்று பல சிறப்பம்சங்கள் இதில் அமைந்துள்ளது…
இது தான் மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையாகும். இதில், 10 ஆண்டு பணிகளுக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சாலையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். அத்துடன், நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது…
மேலும், பனிக்காலத்தில் லடாக்கிற்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான பயணம் துண்டிக்கப்படும். ஆனால், இந்த சாலையில் எந்த காலத்திலும் பயணத்தடை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூற்படுகிறது.