தக்சின் ஷினவாட்டின் மகள் பேதொங்தார்ன் தாய்லந்தின் புதிய பிரதமராகத் தெரிவு.

தாய்லந்தின் அடுத்த பிரதமராகப் பேதொங்தார்ன் ஷினவாட் (Paetongtarn Shinawatra) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் முன்னைய பிரதமர் தக்சின் ஷினவாட்டின் (Thaksin Shinawatra) இளைய மகள்.

37 வயது பேதொங்தார்ன் அந்நாட்டின் ஆக இளம் பிரதமராகவும் இரண்டாவது பெண் பிரதமராகும் திகழ்வார். ஷினவாட் குடும்பத்திலிருந்து தாய்லந்தின் பிரதமராகும் மூன்றாமவரர் அவர்.

செட்டா தவீசினை (Srettha Thavisin) அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை (14 ஆகஸ்ட்) பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது.

அவ்வாறு பதவியிலிருந்து அகற்றப்படும் தாய்லந்தின் Pheu Thai கட்சியைச் சேர்ந்த நான்காவது பிரதமர் தவீசின்.

Leave A Reply

Your email address will not be published.