ரஷ்யாவைக் காக்க போருக்குச் சென்ற இலங்கைப் படையினர் உக்ரைனில் பிடிபட்டுள்ளனர்.
ரஷ்ய போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற 05 சிறிலங்கா இராணுவ வீரர்கள் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் போர்க் கைதிகளாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசாங்கம் , துருக்கியின் அல்கராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
தூதரகத்தினால் அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களை விடுவிப்பதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் கலந்துரையாடல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்நாட்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை அனுப்பும் மனித கடத்தல் தொடர்பாக சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்த போரின் போது 06 ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மனித கடத்தல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.