விமானப் பயணப் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண் மாண்டார்

விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் “conveyor belt” எனும் நகரும் இயந்திரத்தில் சிக்கிய பெண் ஒருவர் மாண்டார்.

அச்சம்பவம் அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) O’Hare அனைத்துலக விமான நிலையத்தில் நடந்தது.

மாண்ட பெண்ணின் வயது 57. அவரைப் பற்றிய மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அவர் விமான நிலைய ஊழியர் இல்லை.

பயணப் பெட்டிகளுக்கான நகரும் இயந்திரத்தில் பெண் ஒருவர் சிக்கிப் பேச்சு மூச்சின்றிக் கிடப்பதாக சிக்காகோ தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

உடனே அத்துறை சம்பவ இடத்துக்கு விரைந்ததாக BBC சொன்னது.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண் ஆளில்லாத, அனுமதிக்கப்படாத இடத்துக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

Leave A Reply

Your email address will not be published.