குரங்கம்மைத் தொற்றுக்கான எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது
உலகச் சுகாதார நிறுவனம் குரங்கம்மைத் தொற்றுக்கான எச்சரிக்கை நிலையை உயர்த்தியிருக்கிறது.
ஸ்வீடனில் புதிய கிருமி வகை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.`
ஆப்பிரிக்காவுக்கு அப்பால் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டிருக்கும் முதல் நாடு ஸ்வீடன் என்று ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
குரங்கம்மைத் தொற்றால் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பிய ஒருவர் பாதிக்கப்படிருப்பதைப் பாகிஸ்தானும் உறுதிப்படுத்தியது.
சீனா அடுத்த 6 மாதத்துக்கு நாட்டுக்குள் நுழையும் பயணிகளையும் கொண்டுவரப்படும் பொருள்களையும் அணுக்கமாகக் கவனிக்கவிருப்பதாய்க் கூறியது.
ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குத் தடுப்புமருந்துகளை வழங்க 500 மில்லியன் டாலர் வரை ஒதுக்கியிருப்பதாக GAVI அனைத்துலகத் தடுப்புமருந்து நிர்வாகக் குழுமம் தெரிவித்தது.