இந்தியாவில் நாடளாவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மருத்துவர்கள்
இந்தியாவில் மருத்துவர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் அவசரமற்றச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல இடங்களில் மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மருத்துவமனைகள், அவசரகாலப் பராமரிப்பைத் தவிர அனைத்துச் சேவைகளையும் நிறுத்தியுள்ளன.
கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்திய மருத்துவச் சங்கம் ஊழியர்களின் பாதுகாப்பையொட்டி 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
பல்லாயிரம் பேர் அண்மைச் சம்பவம் குறித்து நீதி வேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்துகின்றனர்.
கடந்த புதன்கிழமை சம்பவம் நடந்த மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக , இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.