பெண்ணுடன் தொடர்பை பேணிய 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை.
திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்பை பேணிய 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஏனைய ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கே இவ்வாறு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் வெயங்கொட பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.