சினிமா போல… இந்திய நீதிமன்ற காவலில் இருந்து தப்பியோடி, திருடிய படகில் இலங்கை வந்தவர் சிக்கினார்.
இந்திய மாநிலமான கேரளாவின் மத்திய சிறை மற்றும் சீர்திருத்த மையம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களில் இலங்கையர்களும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் திருச்சூர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கைதி ஒருவர் அண்மையில் சிறைச்சாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி, 400 கி.மீ சைக்கிள் ஓட்டிய சென்று , படகு ஒன்றை திருடி இலங்கைக்கு தப்பி வந்துள்ளார்.
அங்குலான சமுத்திரசன்ன மாவத்தையில் வசிக்கும் 52 வயதான வர்ணகுலசூரிய படபண்டிகே அஜித் நிஷாந்த என்பவரை ,ஏப்ரல் 2021 இல், சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரி கிம்புல அல குணாவின் நெருங்கிய உறவினரான இவருடன் , ஐந்து இலங்கையர்களை 340 கிலோ ஹெரோயினுடன் இந்திய கடலோர காவல்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
திருடப்பட்ட ஃபைபர் படகில் அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் வந்துள்ளார், ஆனால் இலங்கைக்கு தப்பி வந்தவர் , வென்னப்புவ பொலிஸாரால் கடந்த 10 ஆம் திகதி வென்னப்புவ தல்தெக (கடவத்த) கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் திருடப்பட்ட படகில் ஏறி மூன்று நாட்கள் சூரிய உதயத்தை வைத்து இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் அஜித் நிஷாந்த, இந்த நாட்டு மீனவர்களின் இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜித் பயணித்த படகு கல்பிட்டி கடற்கரையில் எரிபொருள் இல்லாமல் மிதந்து கொண்டிருந்ததை அவதானித்த மீனவர்கள் கடலோரப் பகுதியில் ஒரு படகு மிதந்து கொண்டிருந்ததாக காவல்துறை மற்றும் கடற்படைக்கு அறிவித்தனர். அந்த படகில் இலங்கையர் ஒருவர் இருக்கிறார் என்றோ அல்லது அவர் இந்தியாவில் இருந்து தப்பி வந்த கைதி என்றோ தெரியாமல் கடற்படையினரும் பொலிஸாரும் சென்ற போது மாட்டிக் கொண்டுள்ளார்.