“Monkeyfox” நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க நிபுணர்களின் ஆலோசனையை மட்டுமே எடுக்குமாறு GMOA சுகாதார அமைச்சிடம் கோரிக்கை!
ஆபிரிக்க பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் Monkeyfox நோய் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு, நிபுணர்களின் அறிவைப் பெற்றுக் கொண்டு சுகாதார அமைச்சு உடனடியாகத் தேவையான முடிவுகளை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் Monkeyfox நோயாளர்கள் பதிவாகாவிட்டாலும், நோய் பரவும் நாடுகளில் இருந்து வரும் மக்களை உடனடியாக பரிசோதித்து அவதானம் செலுத்துவதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு சங்கம் சுகாதார அமைச்சிடம் விசேட கோரிக்கை விடுக்கிறது.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபரை பரிசோதிக்கவும், அவரை தனிமைப்படுத்தவும், அவருடன் தொடர்புடையவர்களைச் சோதனை செய்யவும் விசேட நடைமுறையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் எங்களிடம் உள்ளன, இப்போது Monkeyfox காய்ச்சலின் அனைத்து விவரங்களையும் அது எவ்வாறு பரவுகிறது என்பதையும் அறிந்துள்ளோம், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினம் அல்ல.
இந்த நோய் தோல் தொடர்பு மற்றும் உடலுறவு மூலம் பரவும் என்பதால், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். உடலில் வலி, தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகள் இங்கு காணப்படுவதாகவும், இதனால் நாட்டில் இதுவரை எந்த நோயாளர்களும் பதிவாகவில்லை என்பதால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.