பேராயரைச் சந்தித்த அநுரகுமார.

கொழும்பு பேராயர் இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க சந்தித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடிய அநுரகுமார திஸாநாயக்க, அவர்களிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியும் இணைந்துகொண்டார்.