தாய்லந்தின் முன்னைய பிரதமர் தக்சினுக்கு அரச மன்னிப்பு

தாய்லந்தில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அரச மன்னிப்பு முன்னைய பிரதமர் திரு. தக்சின் ஷினவாட்டுக்கும் (Thaksin Shinawatra) வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கான நிபந்தனையுடன் கூடிய விடுதலை நாளை (18 ஆகஸ்ட்) முடிவுக்கு வரும் என்று அவருடைய வழக்கறிஞர் வின்யட் சார்ட்மொந்திரி (Winyat Chartmontri) Reuters செய்தி நிறுவனத்திடம் இன்று (17 ஆகஸ்ட்) கூறினார்.

திரு. தக்சினின் விடுதலை இந்த மாத இறுதியில் முடிவுக்கு வரவிருந்தது.

நன்னடத்தைக் குற்றவாளிகளுக்குத் தாய்லந்து மன்னரின் பிறந்தநாளன்று மன்னிப்பு வழங்கப்படும்.

அதனால் திரு தக்சினின் நிபந்தனையுடன் கூடிய விடுதலை முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.

அவர் தம்மை 15 ஆண்டுகளுக்குச் சுயமாக நாடுகடந்து வாழ்ந்தபிறகு கடந்த ஆண்டு (2023) தாய்லந்து திரும்பினார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டவற்றில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட அவருக்கு 8 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.