துருக்கி நாடாளுமன்றத்தில் அடிதடி
துருக்கி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சிறையில் உள்ள எதிர்த்தரப்பைச் சேர்ந்த கென் அட்டலெயின் (Can Atalay) நாடாளுமன்ற உரிமைகள் அகற்றப்பட்டதை விவாதிக்கும்போது அந்தச் சண்டை ஏற்பட்டது.
அந்தச் சம்பவம் 30 நிமிடங்களுக்கு நீடித்தது.
அதில் குறைந்தது 2 பேர் காயமுற்றனர்.
“அட்டலெ பயங்கரவாதியென அழைக்கப்படுவது ஆச்சரியம் இல்லை.. ஆனால் அந்த இருக்கைகளில் அமர்ந்திருப்போர்தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் எனக் குடிமக்களுக்குத் தெரியவேண்டும்,” என்று எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஆளுங்கட்சியைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேடைக்குச் சென்று அந்தக் கருத்தைத் தெரிவித்த உறுப்பினரைத் தாக்கினார்.
ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து அவரைப் பல முறை குத்தினர்.
அந்தச் சண்டை காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. அதில் ஊழியர்கள் ரத்தக்கறையைத் துடைப்பதும் பதிவாகியிருந்தது.